(ta) குருசியாக்யோகா

  • உங்களுக்கு வசதியான முறையில் உட்கார்ந்துகொள்ளுங்கள்.
  • நீங்கள் தரையில் உட்காரலாம், படுத்துக்கொள்ளலாம், நாற்காலியில் அல்லது வேறு வசதியான இடங்களில் உட்காரலாம்.
  • குரு சியாக் அவர்களின் படத்தை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் ஒன்றிரண்டு நிமிடங்கள் பார்க்கவும்.
  •  பிறகு கண்களை மூடி குரு சியாக் அவர்களிடம் மானசீகமாக கூறுங்கள் “15 நிமிடங்கள் தியானம் செய்ய உதவுங்கள்” என்று.
  • பிறகு கண்களை மூடிய நிலையிலேயே இரு புருவங்களுக்கு மத்தியிலே குருவின் படத்தை நினைவுபடுத்தி பாருங்கள்.

அதாவது குரு சியாக் அவர்களின் படத்தை நெற்றிப்பகுதியில் மனதால் கற்பனை  செய்ய முயலுங்கள்.

  • படத்தை நினைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இறை மந்திரத்தை 15 நிமிடங்கள் ஜெபியுங்கள். (மந்திரத்தை தெரிந்துகொள்ள GSY வலைத்தளத்தை பார்க்கவும்.)
  • தியானம் செய்யும்போது உங்களை அறியாமல் யோக ஆசனங்களை செய்யலாம் அல்லது உடல் ஆடலாம்.

 பலர் சாய்ந்தாடலாம், தலையாட்டலாம், சுழற்றலாம், வயிற்றை உள்ளிழுக்கலாம், உப்பவைக்கலாம், கைத்தட்டலாம், உறுமலாம், முனகலாம், சிரிக்கலாம். பதட்டப்படவோ கவலைப்படவோ தேவையில்லை.

உங்கள் உடலை தூய்மையாக்க, உங்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்த குண்டலினி சக்தியினால், இவையெல்லாம் தானாக நடப்பவை.

  • நீங்கள் அதிர்வுகளையோ, பிரகாசமான ஒளியையோ அல்லது நிறங்களையோ கூட உணரலாம் அல்லது பார்க்கலாம்.

 இவைகள் நீங்கள் நன்கு முன்னேறுகிறீர்கள் என்பதற்கு சான்று.

  • அனாலும், நீங்கள் இவையெல்லாம் அனுபவிக்கவில்லை என்றால் நீங்கள் முன்னேறவில்லை என்று அர்த்தம் இல்லை.

உங்களில் விழித்துக்கொண்ட இறை சக்தி இந்த அனுபவங்கள் உங்களுக்கு தேவையில்லை என்று நினைத்திருக்கலாம்.

  • உங்கள் தியான பயிற்சி நீங்கள் எவ்வளவு நேரம் தியானம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து இருந்தீர்களா மிகச்சரியாக அதே நேரத்தில் முடிவுறும்.
error: Content is protected !!