ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூன்று குணங்கள் உள்ளது: சாத்வீக (பரிசுத்த, ஒலி) குணம், ரஜோ (உணர்ச்சி மிகு) குணம், மற்றும் தாமச (மந்த) குணம்.
இந்த குணங்கள் ஒருவருடைய ஒட்டுமொத்த மனம், வெளித்தோற்றம் மற்றும் செயல்களை மட்டுமல்லாமல் உணவுப்பழக்கங்களையும் தீர்மானிக்கின்றன.
தொடர் குரு சியாக் யோகா (GSY) பயிற்சியால் ஒருவருடைய சாத்வீக குணம் மேலோங்கி ரஜோ மற்றும் தாமச குணங்களை நீக்குகிறது.
சாத்வீக குணம் மேலோங்கும்போது ஒருவருடைய நோக்கம், நேர்மறையாக, அறிவார்ந்ததாக, உணர்வுபூர்வமாக, பரிசுத்த சிந்தனைகளாக மற்றும் செயல்களாக மாறுகிறது.
அதனால் உணவு விருப்பங்களும்கூட மாறுகிறது.
ஒட்டுமொத்தமாக ஒருவர் தனது உடல் நலம், மனநலம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தடையாக உள்ள அனைத்தும் அவர் முயற்சியில்லாமலேயே அவர் அறியாமலேயே வெளியேறிவிடுகிறது.
இதனால் ஒருவரின் போதை பழக்கம், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் உடல் நலம் கெடுக்கும் உணவுப்பழக்கம் போன்றவை அவரை விட்டுப்போய்விடும்.
இறை மந்திர ஜெபத்தால் ஒருவரின் உள்மனதில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர் படிப்படியாக இவைகளை வெறுத்து ஆரோக்கியம் தரும் செயல்களில் நாட்டம்கொள்வார்.
சுவாமி விவேகானந்தர் இந்த எளிதான அடிமைப்பழக்க விடுதலை பற்றி கூறும்போது, ” நீங்கள் அவைகளை விடத்தேவையில்லை; அவை உங்களை விட்டுவிடும்.” என்கிறார்.