(ta) குருசியாக்யோகா

சூழ்னிலைகளை கட்டுக்குள் வைக்க கோபம் தலைப்படுகிறது மற்றும் அது இயலாததால் ஏற்படும் ஏமாற்றமும் இதற்கு காரணமாகிறது.

நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலாத போது நமது சக்தி நெருப்பாக மாறுகிறது. அது நம்மை எரிக்கிறது. குரு சியாக் சொல்கிறார், ” இறந்தவரின் உடல் தகனம் செய்யப்படுகிறது; நெருப்பு அதை சாம்பலாக்கிவிடுகிறது.

ஆனால் கோபம் ஒருவரை உயிருடன் எரிக்கிறது.” நாம் ஆத்திரம் கொள்ளும்போது செய்யும் செயல்கள் திருப்ப முடியாதவை, ஈடு செய்யமுடியா பாதிப்பை அது ஏற்படுத்தும்.

சில நேரங்களில் கோபம் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஒருவரால் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத வடுவாகிவிடும்.

மருத்துவர்களும், தெரபிஸ்ட்களும், கோபத்தை குறைக்க அல்லது தவிர்க்க பல சிகிச்சை முறைகளை கையாளுகிறார்கள். கோபத்தை கட்டுப்படுத்தப்பட்ட சுலபமான வழிகளில் வெளிப்படுத்துதல், மடை மாற்றி வேறு நல்ல காரியங்களில் செலவிடுதல், மூச்சு பயிற்சிகளின் மூலம் அமைதியடைதல் போன்றவை அவை.

சில நேரங்களில் மயக்க மருந்துகளும் கொடுக்கப்படுகிறது.

மேற்கண்டவை ஒரு அளவிற்கே பயன் தருகிறது.

இவை தற்சமயத்திற்கு விடுபட உதவுகிறதே அன்றி அதிலிருந்து முற்றிலுமாக விடுபட இயலவில்லை.

சொல்லப்ப்போனால் மேற்கண்ட முறைகள் ஒருவரின் கோபத்தை தனக்குள்ளே அடக்க முயலுகிறதே அன்றி அதை முற்றிலும் நிரந்தரமாக போக்க முயலுவதில்லை.

குரு சியாக் கூறுகிறார், ” கோபத்தின் வெளிப்பாடு என்பது முடிவில்லாத சக்கரம் போன்றது என்று. ” நீங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மற்றவரை எரிக்கிறீர்கள் ”

அடுத்தவர் உங்கள் கோபத்தை அமைதியாக ஏற்றுக்கொள்வதில்லை.

அவரது எதிர்வினை உங்களது கோபத்திற்கு இணையாக இருக்கும்.

இதற்க்கு முடிவே இல்லை. ஒருவர் மேல் ஒருவர் சேற்றை வாரி இறைத்துக்கொள்வது போன்றதுதான்.

கண்டிப்பாக உங்கள் மேல் சேறு படிந்துவிடும். பல தலைமுறைகளாக இது தொடர்ந்து வருகிறது. ஏனென்றால் இது வெறுப்பாக மாறிவிட்டது. இந்த தொடர் சங்கிலியை எப்படி அறுப்பது?

கோபத்தை தியானம் என்ற முடிவில்லா கடலில் எறிவதுதான் அதிலிருந்து விடுபட ஒரே வழி என்றே குரு சியாக் அவர்கள் கூறுகிறார்.

கோபத்திற்கு பொறுப்பேற்று உரிமை கொண்டாடுவதைவிட ஒருவர் பாரபட்சம் பார்க்காமல் கோபம் என்பது தன்னில் இருந்து தோன்றிய ஒரு உணர்ச்சி அது வேறு ஒருவரிடம் இருந்தோ அல்லது நிகழ்வுகளில் இருந்தோ தோன்றவில்லை என்பதை உணரவேண்டும்.

தியானத்தில் இருக்கும்போது உங்களால் யாரிடமும் கோபம் கொள்ள முடியாது.

நீங்கள் எளிதாக கோபப்படுகிறீர்கள். கோபம் என்பது வெளியில் இருந்து வரும் ஆற்றல், அதை நீங்கள் உங்களுக்குள் ஊடுருவ அனுமதிக்கிறீர்கள்.

எப்போது அது உங்களில் நுழைகிறதோ அப்போதுதான் அது வலிமையடைகிறது.

கோபம் என்பது ஒருவர் மீது அல்லது சூழ்நிலை மேல் உள்ள விரக்தி அல்லது ஒருவரது நடவடிக்கையால் வருவது.

தியானத்தில் கோபம் திறனற்று போகிறது.

எப்போது கோபம் வந்தாலும் அதை எடுத்து வைத்துக்கொண்டு தியானத்தில் விட்டுவிடவேண்டும்.

உங்களிடம் வந்த கோபம் பிரபஞ்சத்திடம் எறியப்படுகிறது.

ஒரு ஆறு கடலில் கலக்கும்போது அது தனது தரத்தை இழந்து கடலாக மாறிவிடும்.

அதுபோலவே கோபத்தை தியானத்தின்போது ப்ரபஞ்சத்திடம் விட்டுவிட்டால் அது பிரபஞ்சத்தில் கரைந்துவிடும்.

அது தன்னை இழந்து பிரபஞ்சமாக மாறிவிடும்.

இது ஒருமுறையில் சாத்தியமான ஒன்று அல்ல, ஒருவர் கோபம் வரும்போதெல்லாம் தொடர்ந்து இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

சிறிது சிறிதாக கோபம் முற்றிலுமாக கரைந்து விடும்.

கோபத்தில் இருக்கும்போது தியானிப்பது எளிதல்ல, எனவே மந்திரத்தை ஜெபியுங்கள்.

கோபத்தின் முதல் அலை உங்களில் விழும்போது மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்துவிடுங்கள் என்று குரு சியாக் கூறுகிறார்.

மந்திரத்தின் அதிர்வலைகள் கோபத்தின் வேரை அறுத்து அதை வலுவிழக்க செய்கிறது.

அது உங்களை பாதிக்காமல் உங்களை தவிர்த்து வேறு பாதையில் சென்றுவிடும்.

error: Content is protected !!