(ta) குருசியாக்யோகா

வாலிப வயது வந்தபிறகு நாமெல்லாம் நமது சிறுவயது நாட்களில் கவலையற்று வாழ்ந்த அழகான நாட்களை நினைத்து ஏங்குகிறோம்.

நாம் பெரும்பாலும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம் ஏனென்றால் இந்த வயதில் மட்டும்தான் அவர்கள் எதிர்காலத்தை பற்றி எந்த எண்ண அழுத்தங்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்று நினைக்கிறோம்.

இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது.

ஆனால் சிறுவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கு தகுந்த விளைவுகளை பற்றி சிந்திக்கும் அறிவு முதிர்ச்சி இருப்பதில்லை. அவர்களுக்கே உரிய பிரச்சனைகள் அவர்களுக்குண்டு. படிப்பில் கவனம், சக அழுத்தம், பெரியவர்களின் உபதேசம், சமூக அமைப்பு மற்றும் எதிர்பார்ப்பு போன்றவை அவை.

இந்த அழுத்தங்கள் அவர்களின் நடத்தை, உணவுப்பழக்கம், உடல் வளர்ச்சி, உடல்நலம், செயல்திறன் மற்றும் அவர்களின் மற்ற சிறுவர்களுடன் தொடர்புகொள்ளும் திறன் போன்றவற்றை பெரிதும் பாதிக்கிறது.

குரு சியாக் யோகா சிறுவர்களின் எதிர்மறை விளைவுகளை போக்கி உள்ளார்ந்த திறமைகளை வளர்க்கிறது.

குரு சியாக் யோகா வின் எளிய முறை தியான மற்றும் ஜெப பயிற்சியானது சிறுவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக பள்ளியிலும் வீட்டிலும் எளிமையாக புகுத்திவிட முடியும்.

இந்த பயிற்சியானது மந்திர ஜெபம் மற்றும் ஒரு நாளைக்கு இரு வேளை 15 நிமிட தியானம் என எளிமையானது.

தொடர்ந்து குரு சியாக் யோகா பயிற்சி செய்தல் சிறுவர்களுக்கு கீழ்கண்ட பயன்களை தரும்.

மன அழுத்தத்தை குறைக்கிறது: தியானம் என்பது எண்ணங்கள் அற்ற நிலை என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.

உண்மையில் தியானம் என்பது மனதை அமைதிப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் சிறிது மண் சேர்த்து நன்றாக கலக்கிவிடுங்கள்.

மண் நீரில் சுற்றிக்கொண்டிருக்கும், சிறிது நேரத்தில் மெதுவாக அடியில் தங்கிவிடும்.

சிறிது நேரத்திற்குப்பிறகு சுத்தமான நீரை நம்மால் பார்க்க இயலும்.

அதேபோன்றுதான் நாம் தியானிக்கும் பொது மனம் சிறிது நேரம் எண்ணங்களால் சுழலும்.

தொடர்ந்து மந்திர ஜெபித்தலில் கவனம் கொண்டால் சிறிது நேரத்தில் மனம் அமைதியாகிவிடும்.

மனம் எப்போது அமைதியடைகிறதோ அது உடல்முழுவதையும் அமைதியாக்கி அழுத்தம் உடனடியாக குறைந்துவிடுகிறது.

கல்வியில் முன்னேற்றம்: மன அழுத்தம் குறைவதால் கவனம், புத்திகூர்மை அதிகமாகிறது.

குரு சியாக் யோகா பயிற்சி செய்யும் மாணவர்கள் அவர்களுக்கு மிகவும் சிக்கலான பாடங்களை கூட மிக எளிமையாக புரிந்துகொள்ள முடிவதாக கூறுகிறார்கள்.

கவனம் சிதறாமல் குவிக்கப்படுவதால் அவர்களால் எளிதில் பாடங்களை புரிந்துகொள்ளவும் மனதில் ஏற்றவும் முடிகிறது.

கவலை மற்றும் மன அழுத்தம் குறைகிறது: தேர்வில் தோல்வி மற்றும் பயத்தால் தற்கொலை என்பது நாம் கேள்விப்படும் அன்றாட செய்தியாகி விட்டது.

பள்ளிகளில், கல்லூரிகளில் 15 நிமிட தியான பயிற்சியை சேர்த்துக்கொண்டால் இந்த மாதிரி சம்பவங்களை முற்றிலும் தடுத்திவிட முடியும்.

குரு சியாக் யோகா பயிற்சி செய்யும் மாணவர்கள் தங்கள் தேர்வு பயம் மற்றும் கவலையை மிக எளிதாக கடந்துவிடுகிறார்கள்.

தேர்வுக்கு முந்தய தியான பயிற்சி மற்றும் படிக்க துவங்கும் முன் செய்யும் தியான பயிற்சி அவர்களின் மனதை அமைதியாக்கி செய்யவேண்டிய செயலில் முழு கவனத்தை கொடுக்கிறது.

குரு சியாக் யோகா உணர்ச்சிகளை சமநிலைப்படுத்துகிறது – தோல்விகளின்போது அமைதியாக சூழ்நிலையை புரிந்துகொண்டு உணர்ச்சிவசப்படாமல் அதிலிருந்து எப்படி வெளிவருவது வெற்றி பெறுவது என சிந்திக்க வைக்கிறது.

பரந்த விரிவான சிந்தனைகள்: குரு சியாக் யோகா படைப்பு திறன்களை மேம்பட செய்கிறது. மாணவர்களின் சிந்தனை திறன் புதிய பரிமாணங்களை அடைகிறது.

ஆராய்ச்சி, கண்டுபிடித்தல், வடிவமைத்தல், மேம்படுத்துதல் போன்ற கலை மற்றும் அறிவியல் சார்ந்த படைப்பு துறைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு இது முக்கிய பங்காற்றுகிறது.

மகிழ்ச்சியான மனநிலை: குரு சியாக் யோகா மாணவர்களிடம் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி முழுமையான ஆளுமைத்திறனை மேம்படுத்துகிறது.

அவர்கள் மகிழ்ச்சியாகவும் சுய சார்புடனும் இருக்கிறார்கள்.

பல மாணவர்கள் அவர்களின் நம்பிக்கை, உறுதி, மற்றும் புதிய திறமைகளை கற்கும் திறன் மேம்பட்டிருப்பதாக உணர்கிறார்கள்.

அவர்களின் மகிழ்ச்சியான மன நிலை சக மாணவர்களுடன் நல்ல உறவையும், நடத்தையையும் ஏற்படுத்துகிறது.

அவர்களால் மற்றவர்களை புரிந்து நடக்க இயல்வதால் சமூகத்தில் நல்ல மதிப்பும் நல்ல உறவுகளையும் ஏற்படுத்துகிறது.

சிந்தனைகளில் பரிணாம வளர்ச்சி: புரிதலில் ஏற்பட்ட வளர்ச்சி, அவர்களை மக்களின் தேவைகளை புரிந்து உடனடியாக செயல்பட வைக்கிறது.

பல இடங்களில், சிறுவர்கள் தங்களது வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பதிலும், இயலாதவர்களுக்கு உதவுவதிலும், சுய சார்பிலும், தங்கள் நண்பர்களை பாதுகாப்பதிலும் ஈடுபடுகிறார்கள்.

error: Content is protected !!