(ta) குருசியாக்யோகா

உடல் சார்ந்த நோய்களில் இருந்து விடுபடுதல்.

மனிதர்களை பாதிக்கும் நோய்களை உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த நோய்கள் என இரண்டு வகையாக நவீன மருத்துவம் வகைப்படுத்துகிறது.

இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் உடல் மேலாக தடவும் மருந்துகள் அல்லது மாற்று சிகிச்சை முறைகளை உபயோகப்படுத்துகிறார்கள்.

நமது நாட்டில் வாழ்ந்த பழங்காலத்து முனிவர்கள் மனித வாழ்க்கையின் புதிர்களை மிக ஆழமாக தியானத்தின் மூலம் சென்று நோய்களின் கரணம் ஒருவருடைய இந்த பிறவியில் அல்லது முன் பிறவிகளில் செய்த செயல்களே என்று கண்டுபிடித்தார்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. அது இந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ வந்து சேரும்.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பு, இறப்பு சுழற்சியிலும், நோய்களாலும், வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளாலும் முடிவில்லாமல் சிக்கிக்கொண்டிருக்கிறான்.

எளிமையாக சொல்வதென்றால் கடந்த காலங்களில் செய்த செயல்களின் விளைவாகவே தற்போது நோய்களினாலும் மற்றும் பிரவகைகளினாலும் துன்பத்தை அனுபவிக்கிறான். இதுவே கர்ம வினைப்பயன் ஆகும்.

பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்ரா நூலில் மனிதர்களின் நோய்களை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார். உடல் சார்ந்த, மனம் சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த நோய்கள் என்று.

ஆன்மீகம் சார்ந்த நோய்களுக்கு ஆன்மீகம் சார்ந்த சிகிச்சை முறையே தேவைப்படுகிறது.

தொடர்ந்து செய்யும் தியானம் மற்றும் ஜபம் மட்டுமே ஆன்மீகம் சார்ந்த நோய்களுக்கு தீர்வு அளிக்க முடியும்.

தொடர்ந்து செய்யும் குரு சியாக் யோகா (GSY) பயிச்சிகளின் மூலம் ஒருவர் தனது கடந்த கால கர்ம வினைப்பதிவுகளை அறுத்து நோய்களிலிருந்து விடுபட்டு, வாழ்வின் உண்மையான நோக்கமான சுய உணர்தல் எனப்படும் ஞானத்தை அடைய முடியும்.

error: Content is protected !!