(ta) குருசியாக்யோகா

சக்திபாத தீட்சை மூலம் குண்டலினி சக்தியை தூண்டி குரு சியாக் அவர்கள் சித்த யோகத்தை தனது சீடர்களுக்கு அளிக்கிறார்.

நான்கு வகையான சக்திபாத தீட்சை முறைகள் உள்ளன: தொடுதல், பார்த்தல், இறை மந்திர வார்த்தை மற்றும் உறுதியான தீர்மானம். குரு சியாக் அவர்கள் இறை மந்திர வார்த்தை மூலம் தீட்சை வழங்குகிறார்.

சக்திபாதம் தீட்சை என்றால் பெண் இறை சக்தியின் பாதம் பணிந்து என்று பொருள் தரும்.

சக்திபாதம் என்பது உண்மையில் இறை சக்தியின் தன்மாற்றத்தை குறிக்கும்.

யோகம் பழகுவோர் பொதுவாக சக்திபாத தீட்சை என்றால் குருவின் சக்தியை சீடரின் உடலில் பாய்ச்சுவது என்று பொருள் கொள்வர்.

குரு சியாக் அவர்களின் கருத்துப்படி இது ஒரு தவறான புரிதல் ஆகும்.

ஏனென்றால் பல யோக நூல்களில் குறிபபிடப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படையில் குண்டலினி சக்தி என்பது செயலற்று இருந்தாலும், ஒவ்வொருவர் உடலிலும் இருக்கிறது.

எனவே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சக்தி பாய்ச்சுவது அவசியமற்றது ஆகிறது.

சக்தி பாத தீட்சை மூலம் சீடர்களின் குண்டலினி சக்தியை தூண்ட குரு தனது சக்தியை ஊக்கியாக மட்டுமே பயன்படுத்துகிறார்.

எதையோ சீடர்களின் மேல் குரு ஊற்றுவதுபோல அல்ல என்று குரு சியாக் விளக்குகிறார்.

நான் பயன்படுத்தும் தீட்சை முறையானது மனித குலத்திற்கு நாத் என்ற யோக பரம்பரையின் மூலம் கிடைத்த வரமாகும்.

சக்திபாத தீட்சை என்றால் வெளியிலிருந்து எதோ சக்தியை குரு சீடர்களுக்கு கொடுப்பது அல்ல.

எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமானால் இது ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கிற்கு தீபம் ஏற்றுவது போலத்தான்.

நீங்கள் ஒரு எரியா விளக்கு என வைத்துக்கொள்வோம். உங்களிடம் எரிவதற்க்கு தேவையான அனைத்தும் உள்ளது. உங்களுக்கு தேவையானதெல்லாம் மற்றொரு எரியும் விளக்கிலிருந்து சிறிது தீப தூண்டுதல் மட்டுமே.

ஒருமுறை நீங்கள் ஒளியின் மூலத்தொடு இணைந்து விட்டால் நீங்கள் உங்களுக்கே ஒளியாகிவிடுவீர்கள். இதுவே சக்தி பாத தீட்சை பற்றிய எனது எளிய விளக்கம்.

 

error: Content is protected !!