- குரு சியாக் யோகா ஆனது பதஞ்சலி முனிவர் அருளிய யோக சூத்ராவின் அஷ்டாங்க ( 8 நிலைகள் ) தத்துவத்தின் அடிப்படையில் ஆனது.
- தொடர்ந்து பயிற்சி செய்யும்போது மந்திர பாராயணம் (ஜபம்) தன்னிச்சையான செயலாக மாறுகிறது. இதை அஜபா ஜபம் என்பர். இந்த நிலையில் ஒருவர் தன்னையறியாமல் தன்முனைப்பு இல்லாமல் மனதளவில் ஜபித்துக்கொண்டிருப்பர்.
- ஒருவர் இந்த நிலையை (அஜபா ஜபம்) அடையும்போது அது இறை ஒலியாக மாறுகிறது. இது அநாஹத நாதம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு பொருட்கள் ஒன்றோடொன்று மோதும் பொது இந்த ஒலி கேட்கிறது. இந்த தெய்வீக ஒலி உடலில் இருந்து வருவதல்ல, இது தடையில்லாத, முடிவில்லாத ஒட்டு மொத்த பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி ஒலிக்கும் ஒலியாகும். இந்த நாதம் முதலில் ஒரு காதில் கேட்கும். இது ஒருவருடைய ஆன்மீக பாதையின் முன்னேற்றத்தைக்குறிக்கும் மைல்கல்.
- தொடர்ந்து பயிற்சி செய்தால் ஒருவருக்கு பல தெய்வீக சக்திகள் கிடைக்கும். இந்த தெய்வீக சக்திகளில் ஒன்று உள்ளுணர்வு ஞானம். உள்ளுணர்வு ஞானம் அடைந்தவர்களால் எதிர்காலம் மற்றும் கடந்த காலங்களை பார்க்கவும் கேட்கவும் முடியும்.
- தியானத்தில் இருக்கும் பொது ஒருவர் அவரை அறியாமல் கேசரி முத்திரை (நாக்கை மேல் நோக்கி மடித்து நுனி நாக்கை மேல் அன்னத்தில் தொடுமாறு வைத்துக்கொள்வது.) செய்வார் இதனால் அமிர்தம் சுரக்கும். தொடர்ந்து தியானம் செய்வோருக்கு இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. அமிர்தமானது ஒருவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும்.
- தொடர்ந்து பயிற்சி செய்பவரின் குணம் தமோ குணத்தில் இருந்து ரஜோ குணமாகவும், பிறகு சாத்வீக குணமாகவும் மாறுகிறது. குணம் மாற்றம் என்பதன் அர்த்தம் ஒருவருடைய ஆளுமைத்திறன் முழுவதும் மாறுகிறது என்பதாகும்.
- பயிற்சி செய்பவர் இறுதியில் முக்தி (பிறப்பு இறப்பு தொடரில் இருந்து விடுதலை) பெறுகிறார்.
error: Content is protected !!